போதைப் பொருள் ஒழிப்பு - சட்டங்களை திருத்தி கடுமையாக்க அரசு முடிவு எடுத்துள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாஃப்ட் முதலமைச்சர் இல்லை
நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்க்கொண்டார்.
அப்போது அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பேசுகையில், ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் போதைப் பொருள் நடமாட்டத்திற்கு எந்த விதத்திலும் துணைபோகக் கூடாது.
இதை ஏதோ நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. இவர் ‘சாஃப்ட் முதலமைச்சர்’என்று யாரும் கருதிவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்குத்தான் நான் சாஃப்ட். தவறு செய்வோருக்கு - குறிப்பாக போதைப் பொருள் நடமாட்டத்திற்கு துணை போவோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன். அதற்கான அதிகாரத்தை நான் எங்கும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
சர்வதிகாரியாக மாறுவேன்
இந்நிலையில், இன்று நடைபெற்ற போதை ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், சட்டங்களை திருத்தி கடுமையாக்க அரசு முடிவு எடுத்துள்ளது. சர்வாதிகாரியாக செயல்பட்டு தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிப்பேன் என்றார்.