முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ சிகிச்சை.., மருத்துவர்கள் கூறியது என்ன?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல்நிலையில் முன்னேற்றம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று சுவாசத்தை சீராக்க ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு எந்தவொரு குறைபாடு இல்லை எனவும், இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளபட்டது.
இந்நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மருத்துவமனைக்கு வந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஏ.கே.விஜயன் ஆகியோர் நலம் விசாரித்தனர்.