ஒரே தலைவராக சங்பரிவாரையும், இந்துத்துவாவையும் எதிர்த்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின் : ஆ.ராசா பெருமிதம்

M K Stalin DMK
By Irumporai Nov 05, 2022 06:09 AM GMT
Report

தமிழகம் முழுவதும் ஹிந்து எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக திருச்சி புத்துாரில் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு தொகுதி திமுகாவின் சார்பில் இந்தி எதிர்ப்பு கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்றது.

மொழி மட்டும் நம்மை சேர்க்கும்

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் பரணிகுமார், அன்பில் பெரியசாமி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர்கள் முத்து செல்வம், விஜயலட்சுமி கண்ணன் உட்டட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்சிறப்பு அழைப்பாளராக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசுகையில் ஜாதியும், மதமும் வேண்டுமென்றால் நம்மை பிரிக்கும் ஆனால் மொழி மட்டும் தான் நம்மை சேர்க்கும்.

ஒரே தலைவராக சங்பரிவாரையும், இந்துத்துவாவையும் எதிர்த்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின் : ஆ.ராசா பெருமிதம் | M K Stalin Against Sangh Parivar And Hindutva

இனத்தாலும் மொழியாலும் பிரிந்து கிடக்கும் அனைவரையும் ஒற்றை குடைக்குள் தமிழ் என்ற மொழிக்கும் ஒன்று இணைத்தவர் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அணிசேரா நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதிய அன்றைய பிரதமர் நேரு சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு கூட்டத்தில் இந்தியை நாங்கள் திணிக்க மாட்டோம் என்று கடிதம் எழுதி இருக்கிறார்என்று அன்று அண்ணா பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இதுவரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் நாடு, எது வரை நீள்கிறதோ அதுவரை உன் எல்லை. இது கலாச்சார பண்பாட்டு அடையாளம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரபஞ்சத்தின் எடை மாறாது என்று சொன்னவன் அன்று தொல்காப்பியன் ஆனால் அதை 200 ஆண்டுகளுக்கு முன்பு நியூட்டன் சொன்னதை நாம் இன்று படித்து வருகிறோம்.

நாங்கள் உதைதான் கொடுக்க வேண்டும்

1600 ஆம் ஆண்டு புருனே என்பவரை உலகம் உருண்டை என்று கூறியதற்காக போப்பாண்டவர் முன்னிலையில் பட்டப்பகலில் அவரை உயிரோடு வைத்து எரித்தார்கள்.

மதம் என்றால் சில தவறுகள் நிகழத்தான் செய்யும் ஆனால் இவர்கள் ஒத்துக்கவே மாட்டேன் என்கிறார்கள் நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் உதைதான் கொடுக்க வேண்டும்.

ஒரே தலைவராக சங்பரிவாரையும், இந்துத்துவாவையும் எதிர்த்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின் : ஆ.ராசா பெருமிதம் | M K Stalin Against Sangh Parivar And Hindutva

கீழப்பளுர் சின்னச்சாமி அன்று திருச்சி ரயில் நிலையத்தில் முதலமைச்சர் பக்தவச்சலம் வந்தபோது இந்தியை திணிக்க வேண்டாம் என்று காலில் விழுந்தார்.

ஆனால் அவர் காலை உதறி தள்ளிவிட்டு போனார் அன்று மாலையே உயிர் மாய்த்தார் கீழப்பளுர் சின்னசாமி அப்படிப்பட்ட தமிழுக்கு வரலாறு கொண்ட திருச்சியில் பேசுவது எனக்கு பெருமிதம். அன்று பெரியாருக்கும் அண்ணாவிற்கும் கலைஞருக்கும் எதிராக வந்த ஆரியமும் சமஸ்கிருதமும் இன்று பல மடங்கு உயர்ந்து தமிழக முதலமைச்சருக்கு வந்துள்ளது.

ஒரே தலைவராக எதிர்த்து நிற்கிறார்

ஆனால் அவர்கள் மூன்று பேரினுடைய இணைந்த சக்தியாக இன்று ஒரே தலைவராக சங்பரிவாரையும் இந்துத்துவாவையும் எதிர்த்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின். ஏன் அவர்களுடன் கூட்டணி வைக்கும் நிலை வந்தது ஏன் வைத்தோம். சிவில் சட்டத்தையும், ராமர் கோவில் கட்டுவதையும், காஷ்மீரின் 360 சட்டத்தை திரும்பப் பெறுவதும் ஒருபோதும் செயல்படுத்தக் கூடாது என்று அன்று கலைஞர் முரசொலி மாறன் மூலம் வாஜ்பாயிடம் எழுதி வாங்கிக்கொண்டு தங்களுடைய கூட்டணிகள் தொடர்ந்தனர்.

பாராளுமன்றத்தில் என்னிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார் நாங்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று சொல்கிறோம், நீங்கள் இந்து தானே ஏன் ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல கூடாது ஆனால், நீங்கள் பெரியார் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டபோது உங்கள் ஒவ்வொருவருடைய பெயரிலும் உங்களுடைய ஜாதியின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் இருக்க யாருடைய பெயரிலும் ஜாதி இணைக்கப்படவில்லை இதுதான் பெரியார் என்று கூறினேன் என்றார்.

ஒரே தலைவராக சங்பரிவாரையும், இந்துத்துவாவையும் எதிர்த்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின் : ஆ.ராசா பெருமிதம் | M K Stalin Against Sangh Parivar And Hindutva

இந்தியை நாங்கள் படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. நூறு ஆண்டுகளாக இந்தி பிரச்சார சபா இருக்கிறது. தேவைப்பட்டால் படித்துக் கொள்ள வேண்டியதுதான். என்னை 15 மாதம் சிறையில் வைத்தார்கள். அங்கு நான் இந்தியை கற்றுக் கொண்டேன்.

தற்போது இந்தி மறந்துவிட்டது வேண்டுமென்றால் மீண்டும் 15 மாதங்களில் சிறையில் வைத்தால் கற்றுக் கொள்ளப் போகிறேன். ஒரு ஓவியம் என்றால் பல வண்ணங்கள் கலந்தது தான்.

ஒரே வண்ணத்தில் ஓவியம் வரைய வேண்டும் என்றால் அதற்குப் பெயர் ஓவியம் என்று கூற முடியாது அதே போல் தான் இந்தி மட்டும் என்றால் இந்தியா இருக்காது என்று கலைஞர் சொல்லுகிறார் எனக் கூறினார்.