சிறைச்சாலை முதல் சட்டமன்றம் வரை - மனிதநேய மக்கள் கட்சியின் வளர்ச்சியும், அதன் எழுச்சியும்...!

Tamil nadu ADMK DMK AIADMK
By Nandhini Oct 14, 2022 12:28 PM GMT
Report

சிறைவாசம் முதல் சட்டமன்றம் வரை மனித நேய மக்கள் கட்சி கடந்து வந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

கட்சியின் தொடக்கம் 

மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மாநில அரசியல் கட்சியாகும். மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கட்சியாகும்.

இக்கட்சி தமிழகத்தில் பிப்ரவரி 2009ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்சியை தலைவராக J.S.ரிபாயி தொடங்கினார்.

கட்சி பொறுப்பு இக்கட்சியின் பொதுச்செயலாளராக எம்.தமீமுன் அன்சாரி இருக்கிறார். இக்கட்சியின் பொருளாராக O.U.ரஹ்மத்துல்லாஹ் உள்ளார்.

மூத்த தலைவராக M.H.ஜவாஹிருல்லா இருக்கிறார். மூத்த செயலாளராக ஹைதர் அலி இருக்கிறார். இணை பொதுச் செயலாளராக ஹாரூண் ரஷீத் இருக்கிறார்.

துணை பொதுச்செயலாளராக ஆர்.சரவணன் இருக்கிறார். அமைப்புச் செயலாளராக பி.ஜோசப் நொலஸ்கோ மற்றும் பி.செல்லச்சாமி இருக்கிறார்.

Manithaneya Makkal Katchi

மு.ஹி.ஜவாஹிருல்லா

தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக மு.ஹி.ஜவாஹிருல்லா (M. H. Jawahirullah) உள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் பிறந்தார். இவர் சிறந்த பேச்சாளர். அதுமட்டுமல்லாமல் எழுத்தாளரும் கூட.

1985ம் ஆண்டு கல்லூரி பேராசிரியராக தன்னுடைய பணியை தொடங்கினார்.இதனையடுத்து, 2009ம் ஆண்டு, வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் வணிகவியல் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுப்பெற்றார்.

M. H. Jawahirullah

1 ஆண்டு சிறை தண்டனை

இதனையடுத்து, 1996ம் ஆண்டில் தமுமுகவின் தலைவராக பொறுப்பேற்றார். 1997ம் ஆண்டு, கோவையில் நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு தமுமுக நிவாரண நிதியை திரட்டி வழங்கியது.

அப்போது, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி பெறாமல் நிதியை வசூலித்ததாக 2011ம் ஆண்டு தமுமுக நிர்வாகிகள் ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, சையது நிசார் அகமது, ஜி. எம். ஷேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோர் மீது மத்தியப் புலனாய்வுத் துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் இவர்களுக்கு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை மத்தியப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்த போது தமுமுக நிர்வாகிகளின் ஓராண்டுத் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.

பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தமுமுக நிர்வாகிகள் மேல் முறையீடு செய்தனர். இதனையடுத்து உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. 

Manithaneya Makkal Katchi

சட்டமன்ற தேர்தல் கூட்டணி 

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்தது. இதையடுத்து இக்கட்சிக்கு அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆம்பூர், சேப்பாக்கம், இராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

3 தொகுதிகளில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளான ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும், இராமநாதபுரத்தில் பேரா.ஜவாஹிருல்லாவும் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

பின்னர் 2016 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. இதையடுத்து 5 தொகுதிகள் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து 5 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்தார்.

உளுந்துார்பேட்டை தொகுதி மீண்டும் திமுகவிடம் வழங்கப்பட்டது. பின்னர் நாகை, இராமநாதபுரம், ஆம்பூர், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது.

Manithaneya Makkal Katchi

திமுக கூட்டணியில் மாபெரும் வெற்றி

கடந்த 12.3.2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் என்று தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா அறிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் மட்டும் 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, பாபநாசம் தொகுதியில் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமதும் போட்டியிட்டனர். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் மனித நேய மக்கள் கட்சி வெற்றி பெற்றது.