அந்த நடிகைக்காக ரஜினியை கடத்திய எம்.ஜி.ஆர்..? - வெளியான தகவல்.. - ஷாக்கான ரசிகர்கள்..!

Rajinikanth Latha M. G. Ramachandran
By Nandhini Jan 25, 2023 01:34 PM GMT
Report

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். இவரின் புகழ் இன்றளவும் தமிழ் மக்களால் பாடிக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மனிதரா? என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கு மக்கள் திலகமாய் பல பணிகளை மக்களுக்கு செய்தார்.

ரஜினியை கடத்திய எம்.ஜி.ஆர்....?

பிரபல பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் பேசுகையில், கடந்த 1978ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த், நடிகை லதா இணைந்து நடித்து வெளியான படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’. இப்படத்தை, துரை இயக்கினார். முத்துராமன் தயாரித்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்றபோது, நடிகை லாதாவும், நடிகர் ரஜினிகாந்த்தும் ரகசியமாக திருமணம் செய்யப்போவதாக எம்.ஜி.ஆர். காதுக்கு தகவல் சென்றது.

இதனால், கோபமடைந்த எம்.ஜி.ஆர். உடனே தயாரிப்பாளர் முத்துக்குமாருக்கு போன் செய்து, “எங்கே இருக்கீங்க?” என்று கேட்க, முத்துக்குமார் “ஐயா, ஆஃபீஸ்லதான்யா இருக்கேன்” என்று கூறியுள்ளார். நான் அடுத்து போன் செய்கிற வரைக்கும் எங்கும் நகரக்கூடாது என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டார்.

இதனால், பதறமடைந்த முத்துக்குமார் எங்கேயும் செல்லாமல் ஆபீசில் இருந்து விட்டார். சில மணி நேரங்களுக்கு பிறகு எம்.ஜி.ஆரிடமிருந்து போன் வந்தது. “இப்போ நீங்க உங்க வேலைய பார்க்கலாம்” என்று கூறி மீண்டும் போனை வைத்துவிட்டாராம்.

m-g-ramachandran-rajinikanth-latha

உடனே கோவையில் இருக்கும் படக்குழுவினருக்கு போன் செய்த முத்துக்குமார் நடந்த விவரத்தை குறித்து கேட்டாராம். அப்போது, ரஜினிகாந்த்தும், லதாவும் மருதமலை கோவிலில் ரகசியமாக திருமணம் செய்யப்போவதாக தகவல் எம்ஜிஆர் காதுக்கு சென்றதும், அவர் அவருடைய ஆட்களை அனுப்பி ரஜினிகாந்த்தை சென்னைக்கு கூட்டி சென்றுவிட்டார் என்று கூறியுள்ளனர்.

அதேபோல், தன் ஆட்களை அனுப்பி லதாவை ஐதராபாத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறியுள்ளனர்.

இதன் பின்பு, மீண்டும் எம்.ஜி.ஆரின் ஆட்கள் ரஜினிகாந்த்தையும், லதாவையும் கோவையில் வந்து இறக்கிவிட்டுவிட்டுச் சென்றார்களாம் என்று தெரிவித்தார்.