எம்.ஜி.ஆரை துப்பாக்கியால சுட்டும் சாகல… - பயமே இல்லாம கூலா பேசிய எம்.ஆர்.ராதா…!

MGR M. G. Ramachandran
By Nandhini Jan 13, 2023 02:09 PM GMT
Report

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். இவரின் புகழ் இன்றளவும் தமிழ் மக்களால் பாடிக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மனிதரா? என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கு மக்கள் திலகமாய் பல பணிகளை மக்களுக்கு செய்தார்.

எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட எம்.ஆர்.ராதா

அதேபோல் தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வந்தவர் எம்.ஆர்.ராதா. இவர் 1967ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி தயாரிப்பாளர் வாசு என்பவருடன், தான் தயாரிக்க உள்ள படத்தைப் பற்றி பேசுவதற்காக எம்.ஜி.ஆர் வீட்டிற்குச் சென்றார்.

அப்போது, எம்.ஜி.ஆரிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எம்.ஜி.ஆரை நோக்கி இரண்டு முறை சுட்டார். இதன் பிறகு, அந்த துப்பாக்கியை கொண்டு எம்.ஆர்.ராதா தன்னை தானே சுட்டுக்கொண்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இரண்டு பேரும் உயிர் பிழைத்தனர்.

எம்.ஜி.ஆரின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அவரது குரல் வளையம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால், அவரால் பேச இயலாமல் கிடந்தார். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிமன்றத்தில் எம்.ஆர்.ராதா வெளிப்படையாகவே தன் செய்த குற்றத்தை ஒத்துக்கொண்டார். இதன் பிறகு எம்.ஆர்.ராதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கு விசாரணையில் நடைபெற்ற நகைச்சுவை குறித்து பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு விழா மேடையில் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

நீதிமன்றத்தில் எம்.ஆர்.ராதாவிடம் நீதிபதி கேள்வி கேட்டார். “எம்.ஜி.ராமச்சந்திரனை சுட்டீங்களே, அந்த துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருக்கிறதா?” என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த எம்.ஆர்.ராதா.. “ஐயா, அந்த துப்பாக்கியால சுட்ட ராமச்சந்திரன் உயிரோடத்தான் உள்ளார்.

அந்த துப்பாக்கியை வச்சி நானும் என்னை சுட்டுக்கொண்டேன். ஆனா நானும் உயிரோடத்தான் இருக்கேன். இப்படி சுட்டும் யாரையுமே சாகடிக்காத அந்த துப்பாக்கிக்கு எதுக்குங்க லைசன்ஸ் என்று மிகவும் நகைச்சுவை தொனியில் கூறினார் என்று பேசினார்.   

m-g-ramachandran-m-r-radha