எம்.ஜி.ஆரின் காதலுக்கு முட்டுக்கட்டையாக இருந்த நபர் யார்ன்னு தெரியுமா? - வெளியான தகவல்... - ஷாக்கான ரசிகர்கள்..!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். இவரின் புகழ் இன்றளவும் தமிழ் மக்களால் பாடிக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மனிதரா? என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கு மக்கள் திலகமாய் பல பணிகளை மக்களுக்கு செய்தார்.
எம்.ஜி.ஆர். காதலுக்கு முட்டுக்கட்டையாக இருந்த நபர்
எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிர் காதலித்தனர்.
1948ம் ஆண்டு தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், பானுமதி, வி.என்.ஜானகி ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் “ராஜ முக்தி”. இப்படத்தை ராஜ சந்திரசேகர் இயக்கினார். எம்.கே.தியாகராஜ பாகவதரே இப்படத்தை தயாரித்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பின்போதுதான் எம்.ஜி.ஆரும், ஜானகியும் முதல்முறையாக சந்தித்துக் கொண்டனர். அப்போது, ஜானகியைப் பார்த்த எம்.ஜி.ஆர். அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார். ஏனென்றால், ஜானகியின் முகம் தோற்றமும், இறந்துப்போன தன் முன்னாள் மனைவியின் தோற்றம் ஒன்றாக இருந்ததாம். ஆதலால் ஜானகியை பார்த்தவுடனே எம்.ஜி.ஆர் திகைத்துப்போய் நின்றுவிட்டார்.
அப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, எம்.ஜி.ஆர். ஜானகியை ஒரு தலையாக காதலிக்கத் தொடங்கியுள்ளார். இதனையடுத்து, பல திரைப்படங்களில் எம்.ஜி.ஆரும், ஜானகியும் ஒன்றாக நடிக்க ஆரம்பித்தனர். “மருதநாட்டு இளவரசி” படத்தில் நடித்துக் கொண்டிருந்த ஜானகி, எம்.ஜி.ஆரை காதலிக்கத் தொடங்கினார்.
ஆனால், இவர்களின் காதலுக்கு, பிரபல நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணாவின் தந்தை முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளார். ரமேஷ் கண்ணாவின் தந்தை ஜானகிக்கு மாமா முறையாகும். ஆனால், இவரின் முட்டுக்கட்டையெல்லாம் பொருட்படுத்தாமல் ஜானகியை திருமணம் செய்தார் எம்.ஜி.ஆர்.