குளித்துக்கூட பல நாட்கள் இருக்கும்... ஆனா.... அந்த குழந்தையை தூக்கி முத்தமிட்ட எம்.ஜி.ஆர்....!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். -
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். இவரின் புகழ் இன்றளவும் தமிழ் மக்களால் பாடிக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மனிதரா? என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கு மக்கள் திலகமாய் பல பணிகளை மக்களுக்கு செய்தார்.
ஒரு நிகழ்ச்சியில் மேடையில் சிவக்குமார், எம்.ஜி.ஆர் குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
எம்ஜிஆர் 8 வள்ளலாக வாழ்ந்தவர். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அலுவலகத்திலிருந்து கோட்டைக்கு புறப்பட்டுக்கொண்டிருக்கும்போது, வாசலில் ஏராளமான குரவன், குறத்தி மக்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். எம்.ஜி.ஆர். கார் வெளியே வரும்போது, அவரை சூழ்ந்து கொள்வார்கள். அப்போது, எம்ஜிஆர். அவர்கள் யாராவரிடம் குழந்தைகள் இருந்தால், அந்த குழந்தையை தன் கைகளால் தூக்கி வைத்துக்கொள்வார்.
கொஞ்ச நேரம் அந்த குழந்தையை கொஞ்சிவிட்டு தான் தருவார். எம்.ஜி.ஆர். அவர்களோ தக தகவென மின்னுகிற மேனி கொண்டவர். ஆனால் குரவன்கள் குளித்து கூட பல நாட்கள் இருக்கும். அப்படி இருந்தும் அந்த குழந்தைகளை வாங்கிக் கொண்டு முத்தமிட்டு அதன் பின் கொடுப்பார். மேலும், அவரிடம் இருக்கும் கட்டு கட்டான ரூபாயை எடுத்து, அவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டு தான் செல்வார்.
அதேபோல், அவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது, ஆரம்ப காலத்தில் அவருக்கு உடுத்திக் கொள்ள ஆடையே இருக்காது. இரண்டு துணிகளை துவைத்து மாறி மாறி உடுத்திக் கொள்வார். இல்லாத சமயத்தில் கூட மாறி மாறி துவைத்து தான் அதே ஆடையை உடுத்திக் கொண்டு வாய்ப்பு தேடி அலைவாராம் எம்ஜிஆர்.
அந்த நேரத்தில் அவர் கையில் 10 ரூபாய் வைத்திருந்தாலும் யாராவது ரோட்டில் பிச்சைக்கேட்டால், கூட அதிலிருந்து 3 ரூபாயை கொடுத்து விட்டு தான் செல்வார். இப்படி ஒரு குணம் படைத்த எம்ஜிஆரை மீண்டும் எப்போது நாம் காணப்போகிறோம் என்று நெகிழ்ச்சியோடு பேசினார்.