சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று பதவி ஏற்பு

By Irumporai Sep 13, 2022 01:51 AM GMT
Report

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்று பணி ஓய்வு பெற்றார்.ட்

புதிய நீதிபதி பதவியேற்பு

இதனால் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இருப்பார் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரிக்கு வழியனுப்பு விழா நேற்று உயர்நீதிமன்றத்தின் சார்பாக நடத்தப்பட்டது.

எம்.துரைசாமி 

இந்நிலையில், ஜனாதிபதியின் உத்தரவின்படி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று காலை 10 மணியளவில் பதவி ஏற்க உள்ளார்.

இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சி தலைமை நீதிபதி சேம்பரில் நடைபெற உள்ளது. இதன்பின்னர், பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமிக்கு சக நீதிபதிகள், மத்திய-மாநில அரசு வக்கீல்கள் வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள்.