“ கருத்து வேறுபாடு காரணமாக மாறன் படத்தில் இருந்து விலகிவிட்டேன்” : அதிர்ச்சி கொடுத்த முக்கிய பிரபலம்

maaranmovie lyricistvivekmaaran dhanushmalavika
By Swetha Subash Mar 08, 2022 08:12 AM GMT
Report

கருத்து வேறுபாடு காரணமாக, தனுஷின் மாறன் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக, பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள‘மாறன்’திரைப்படம் வருகிற மார்ச் 11-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

“ கருத்து வேறுபாடு காரணமாக மாறன் படத்தில் இருந்து விலகிவிட்டேன்” : அதிர்ச்சி கொடுத்த முக்கிய பிரபலம் | Lyricist Vivek Stepped Down From Maaran Team

ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர்கள் சமுத்திரகனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மாறன் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில் படத்திற்கு பாடலாசிரியர் விவேக், வசனம் மற்றும் திரைக்கதை எழுதியதாக கூறப்பட்டது.

ட்ரெய்லரில் வெளியான வசனங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பாடலாசிரியர் விவேக், மாறன் படத்திற்கு நான் வசனம் மற்றும் திரைக்கதை எழுதவில்லை என கூறியுள்ளார்.

“ அந்த வசனங்கள் என்னுடையது அல்ல. வசனங்களை எழுதியவருக்கு அந்த புகழ் சேரும். படைப்பு வேறுபாடுகள் காரணமாக நான் மாறனிலிருந்து உரையாடல் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக வெளியேறிவிட்டேன்.

எனது முடிவை மதித்த படக்குழுவிற்கு நன்றி” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.