தனுஷ் படத்திலிருந்து விலகிய முக்கிய பிரபலம் - ரசிகர்கள் அதிர்ச்சி

dhanush maaran lyricistvivek
By Petchi Avudaiappan Mar 04, 2022 05:53 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் தனுஷ் நடித்துள்ள மாறன் படத்திலிருந்து  திரைக்கதை எழுத்தாளராக பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அவர் விலகியுள்ளார். 

'தொடரி', 'பட்டாஸ்' போன்ற படங்களை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷூடன் 3வது முறையாக இணைந்துள்ள நிலையில் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் படமானது மார்ச் 11 ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

இதனிடையே மாறன் படத்தில் வசனம் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் தான்  கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக மாறன் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விவேக் கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக நான் மாறன் படத்தின் உரையாடல் மற்றும் திரைக்கதை எழுத்தாளரில் இருந்து விலகுகிறேன்.

எனது முடிவை மதித்த குழுவிற்கு நன்றி. இன்று நான் உரையாடல் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன். இதற்கு மாறன் தான் தொடக்கப் புள்ளி என்பதை எப்போதும் நினைவில் கொள்வேன் எனக் கூறியுள்ளார்.