90 நாட்களுக்கு மேல் மாதவிடாய் - இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

London Women Menstruation Bansree Tokia
By Thahir Aug 30, 2021 03:45 AM GMT
Report

லண்டனை சேர்ந்த இளம்பெண்ணுக்கு 90 நாட்களுக்கு மேல் மாதவிடாய் தொடர்ந்த நிலையில் பரிசோதனையில் அவருக்கு அரிதான ஒரு புற்றுநோய் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

பன்ஸ்ரீ தோக்கியா (30) என்ற இளம்பெண்ணுக்கு 90 நாட்களுக்கு மேல் மாதவிடாய் தொடர்ந்திருக்கிறது. இதனால் சோர்வடைவதை உணர்ந்ததோடு, அடிக்கடி மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருக்கிறது.

தான் பிசியாக பணியில் இருந்த காரணத்தால் தான் இப்படி ஆகிறது என முதலில் நினைத்து கொண்டார். பின்னர் இரத்த பரிசோதனை செய்த போதும் அவருக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்ற முடிவு வந்தது.

90 நாட்களுக்கு மேல் மாதவிடாய் - இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் | Lymphoblastic Leukaemia Menstruation Bansree Tokia

இதையடுத்து அடுத்தக்கட்ட பரிசோதனைகளை செய்த போது வந்த முடிவுகள் அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் பன்ஸ்ரீ லிம்போபிளாஸ்டிக் லுகேமியா என்ற அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

அந்த சமயத்தில் அவரின் உடல் மிகவும் பலவீனமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது தொடர் சிகிச்சையின் மூலம் நோயிலிருந்து மீண்டு வருகிறார்.

இது குறித்து அவர் பேசும் போது தொடக்கத்தில் ஏதோ என்னிடம் பிரச்சினை இருக்கும் என நினைத்தேன், ஆனால் இவ்வளவு பெரிய பிரச்சினையாக இருக்கும் என கருதவில்லை. தொடக்கத்தில் 12 மணி நேரம் தூங்கினாலும் உடல் மிகவும் சோர்வாக இருக்கும்.

ராயல் லண்டன் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை எடுத்து வருகிறேன். என் வாழ்வை நினைத்து எனக்கு பயம் வந்துவிட்டது, எனக்கு ஏன் இப்படி ஆனது என என்னையே நொந்து கொண்டேன். சிகிச்சையை தொடர்ந்து எடுத்த நிலையில் நோயிலிருந்து மீண்டுள்ளேன்.

உங்கள் மாதவிடாயில் எதாவது பெரிய மாற்றம் நிகழ்ந்தாலோ அல்லது உடல்நிலையில் பிரச்சினை இருந்தாலோ அலட்சியப்படுத்தாதீர்கள் என கூறியுள்ளார்.

உங்கள் மாதவிடாயில் எதாவது பெரிய மாற்றம் நிகழ்ந்தாலோ அல்லது உடல்நிலையில் பிரச்சினை இருந்தாலோ அலட்சியப்படுத்தாதீர்கள் என கூறியுள்ளார்.

அவருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையில் தொடர்ந்து நோயில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.