டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கத்தை தட்டிச் சென்ற 17 வயது "சிங்கப்பெண்"

America Tokyo Olympics 2020 lydia jacoby
By Petchi Avudaiappan Jul 27, 2021 09:29 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் பிரிவில் 17 வயது இளம் பெண் ஒருவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

கோலாகமாக நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில், 100 மீ. breast stroke வகை நீச்சல் பிரிவில் நடந்த போட்டி ஒன்றில் அமெரிக்க வீராங்கனை லில்லி கிங் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அதே அமெரிக்காவை சேர்ந்த 17 வயதான லிடியா ஜேகோபி தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

போட்டியின் முதலில் சற்று பின்தங்கிய லிடியா, கடைசி 50 மீட்டரில் அபார வேகம் காட்டி இலக்கை 1 நிமிடம் 4.95 வினாடிகளில் எட்டி தங்கம் வென்று அசத்தினார்.2வது இடத்தை தென் ஆப்பிரிக்காவின் தத்யானா ஷூன்மாக்கரும், 3வது இடத்தை லில்லியும் பெற்றனர்.