விடாமுயற்சியை கைவிடும் லைகா..?இப்படி ஒரு சிக்கலா?
அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தை தயாரிப்பதில் இருந்து லைகா நிறுவனம் விலகுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அஜித்தின் விடாமுயற்சி
கடந்த ஆண்டு அஜித்-விக்னேஷ் சிவன் கூட்டணியில் படம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், சில காரணங்களால் இந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட அந்த வாய்ப்பை பெற்றார் மகிழ் திருமேனி.
இந்த ஆண்டின் துவக்கத்திலேயே படம் துவங்கப்படும் என கூறப்பட்டு, அது காலம் தாழ்ந்து தாழ்ந்து தற்போது வரை படப்பிடிப்பு துவங்கவில்லை.
கைவிடுகிறதா லைகா?
படம் மிகவும் தள்ளிப்போகும் காரணத்தால் இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து லைகா நிறுவனம் விலகுவதாக சில நாட்களாக சமூகவலைத்தளத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், அதில் உண்மை என கூறப்படுகிறது.
ஏனென்றால், அஜித் - மகிழ் திருமேனி - லைகா கூட்டணியில் படம் தயாராகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட உடனே படத்தின் டிஜிட்டல் உரிமையை தனியார் நிறுவனத்திற்கு பெரிய தொகைக்கு லைகா விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அதனால் படத்தை கைவிடுவதாக வெளியான செய்திகளில், உண்மை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.