கன்னிச்சாமி புதுசா மலையேறும் நாளப்பா : சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

By Irumporai Nov 17, 2022 06:49 AM GMT
Report

இன்று முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஐய்யப்பன் கோவில் பூஜை

கேரள மாநிலத்தில் உள்ள ஐய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் முதல் தேதியான இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

சிறப்பு பேருந்துகள் 

குறிப்பாக தமிழகத்திலிருந்து பக்தர்கள் பலர் ஐய்யப்பன் கோவில்லுக்கு செல்வது எப்போது வழக்கம் , ஆகவே தமிழ்நாடு அரசு விரைவு போகுவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னிச்சாமி புதுசா மலையேறும் நாளப்பா : சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம் | Luxury Special Buses Run To Sabarimala

அமைச்சர் விளக்கம்

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்

கன்னிச்சாமி புதுசா மலையேறும் நாளப்பா : சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம் | Luxury Special Buses Run To Sabarimala

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை திருவிழாக்களின் போது தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக, தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டும் 17ஆம் தேதியான இன்று முதல் 20. 1. 2023 வரை சென்னை, மதுரை, திருச்சி, கடலூர் ஆகிய நகரங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் பம்பைக்கு அதே நவீன சிறப்பு சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.