சொகுசு கப்பலில் தொடரும் போதை விருந்து - நாப்கினில் மறைத்து போதை பொருள் கடத்திய பெண்
சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்தில் கலந்துக்கொண்டு பெண் ஒருவர் நாப்கினில் போதை பொருளை மறைத்து எடுத்து வந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதை பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து போதை பொருள்தடுப்பு பிரிவினர் சாதாரண பயணிகளை போல் கப்பலில் பயணம் மேற்கொண்டனர்.
அப்போது பொதுவெளியில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை பயன்படுத்துவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து 8 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் மகன் ஆரியன் கானும் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து இந்த விவகாரம் பூதாகரமானது. திரைதுறையை சேர்ந்தவர்கள் மாடல் அழகிகள் இதில் கைதாகினர்.
இதனையடுத்து மும்பையின் பல பகுதியில் போதை பொருள்தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். தற்போது வரை இந்த விவகாரத்தில் 19பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் போதை பொருள்களை சானிடரி நாப்கின்களில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.