பாரத் பெட்ரோல் பங்கில் சொகுசு காரில் திருட்டு - கொந்தளித்த பிரபல டான்ஸ் மாஸ்டர்
பாரத் பெட்ரோல் பங்கில் தனது சொகுசு காரின் சக்கரத்திற்கு காற்று நிரப்ப சென்ற பிரபல நடன இயக்குநர் ஸ்ரீதர் கார்களின் வால்யூம் கவர்கள் திருடப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பெட்ரோல் பங்கில் அட்டூழியம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தியாகராய நகர் பகுதியில் உள்ள பாரத் பெட்ரோல் பங்கில் தனது சொகுசு BMW காருக்கு காற்று நிரப்ப சென்றுள்ளார்.
அங்கு காற்று நிரப்பிய வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் மீது சந்தேகம் அடைந்த நடன இயக்குநர் ஸ்ரீதர் கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார்.
அப்போது ஒருவர் காற்று நிரப்பும் மெஷின் கீழே கார் சக்கரத்தின் வால்யும் கவர்களை திருடி வைத்திருந்ததை தனது வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
நடன இயக்குநர் ஸ்ரீதர் குற்றச்சாட்டு
வால்யும் கவர்கள் ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் காருக்கு காற்று நிரப்ப வருவோர் கட்டாயம் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர் தனது வீடியோவில் இந்ந வால்யும் கவர் குறித்து பெட்ரோல் பங்கு தரப்பில் கேட்டதற்கு காரில் வருவோர் காற்று நிரப்பிய உடன் வால்யும் கப்புகளை முடுவதற்குள் கிளம்பிவிடுவார்கள் அதனாலே எடுத்து இங்கே வைத்திருப்பதாக விளக்கம் அளித்ததாக கூறினார்.
வால்யும் கவர்களை வால்டாஸ் சாலை பகுதியில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
