லுங்கி தடை செய்யப்பட்ட ஆடையா? : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ADMK D. Jayakumar
By Irumporai Aug 12, 2022 10:39 PM GMT
Report

சாமானிய மக்கள் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரக்கூடாது என மறைமுகமாக சொல்லப்படுகிறதா? என  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயக்குமார் கேள்வி

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க லுங்கி அணிந்து வந்தவரை காவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

லுங்கி தடை செய்யப்பட்ட ஆடையா? என்றும் சாமானிய மக்கள் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரக்கூடாது என மறைமுகமாக சொல்லப்படுகிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.