நுரையீரல் நோய்களை குணப்படுத்த எளிமையான கசாயம்... செய்வது எப்படி?
நம்முடைய ஆரோக்கியமான வாழ்வுக்கு நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பது அவசியம், ஏனெனில் நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் கார்பன்டைக்சைடு வளிமத்தை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.
எனவே நுரையீரல் பாதிப்படையாமல் ஆரோக்கியமாக இருப்பது அவசியம், நுரையீரல் பாதிக்கப்பட்டால் கடுமையான சளி, மூச்சுத்திணறல் போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.
நுரையீரலை பாதுகாக்க ஆயுர்வேதத்தில் மருந்திருக்கிறது, இந்த கசாயத்தை தயாரிப்பது எப்படி? எந்நேரத்தில் பருக வேண்டும்? என தெரிந்து கொள்ளலாம்.