வீரமணியுடன் மதிய உணவு : இது எனது நீண்ட நாள் ஆசை - அண்ணாமலை
திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு சாப்பிட விரும்புவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வீரமணியுடன் மதிய உணவு
எதிர்கால அரசியல் தலைவர்களாக உருவாக பயிற்சி வழங்கப்படும் நிகழ்வில் கலந்துகொண்ட அண்ணாமலை பேசியதாவது : பாஜக தொண்டர் மற்ற கருத்தியலை பின்பற்றும் நபர்களிடம் பேச வேண்டும். அப்படி பேசினால் நம்மில் அது பெரிய மாற்றத்தை உருவாக்கிடும் எனக் கூறினார்.

மேலும், திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு சாப்பிட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசைகளில் ஒன்றாகும் அதே போல் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கும் முன்பு, நான் சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்திக்க வேண்டும் என்று கூறினேன்.
இதை கேட்டு பாஜக உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் நான் அவரை பார்த்து ஆசீர்வாதம் பெற்றேன் எனக் கூறினார்.
தமிழக முதலமைச்சரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி : தவறாக சித்தரிக்கப்பட்டமைக்கு கண்டனம் IBC Tamil