முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சண்டை போட்ட ஆசிரியர்கள் - வைரலாகும் வீடியோ

By Petchi Avudaiappan May 13, 2022 09:42 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

பஞ்சாப்பில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சண்டை போட்ட ஆசிரியர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில், முதலமைச்சர் பகவான் மன் தலைமையிலான  பள்ளி கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய சீா்திருத்தங்கள் தொடா்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை (மே 10)  நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு அரசுப்பள்ளிகளின் தலைமையாசிாியா்கள் மற்றும் ஆசிாியா்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அதில் தட்டை பெறுவதற்காக ஆசிாியா்கள் ஒருவருக்கொருவா் போட்டி போட்டுக் கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் உணவுக்காக தட்டை ஒருவர் அடுக்கி கொண்டிருக்க அங்கிருந்த ஆசிரியர்களோ எங்கே தட்டு கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் தட்டுகளை பிடுங்கி கொண்டு செல்கின்றனர். 

மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இப்படி செய்யலாமா என இந்த வீடியோவை பார்த்த பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.