ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் உன்னதமான உணவகம்
சென்னையில் தினசரி மத்திய உணவை ஒரு ரூபாய்க்கு அளித்து வரும் உணவகம் குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஜெயின் அன்னபூர்ணா டிரஸ்ட் சார்பில், 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. தினசரி, 250 பேருக்கு மட்டுமே இது வழங்கப்படுகிறது.
சென்னையில், ஏழை மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் சுவையான உணவு வழங்க, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திட்டம் கொண்டு வந்தார். அதன் படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 200 வார்டுகளிலும் தலா இரண்டு அம்மா உணவகங்கள் திறக்கப் பட்டுள்ளன.
இதே நோக்கத்தை பின்பற்றி, பல்வேறு சமூக சேவை நிறுவனங்களும் ஏழை மக்களுக்கு உணவளித்து வருகின்றன. இது குறித்து அந்த டிரஸ்ட் ஊழியர்கள் தெரிவித்ததாவது,"மனிதன் போதும் என்று விஷயம் உணவு மட்டும் தான். அந்த உணவை ஏழை மக்களுக்கு அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் உணவை இலவசமாக அளித்து அவர்களுக்கு பிச்சை எடுப்பது போல் எண்ணத்தை ஏற்படுத்தாமல். உணவை ஒரு ரூபாய்க்கு அளித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்".