விஜய் நிகழ்ச்சியில் தடபுடலாக தயாராகும் மதிய உணவு - அடடே இத்தனை வகையா?

Vijay Tamil nadu
By Vinothini Jun 17, 2023 07:30 AM GMT
Report

 நடிகர் விஜய் இன்று மாணவ மாணவிகளை சந்திக்கும் நிகழ்ச்சியில் தயாராகும் உணவு வகைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சி

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் விருது நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடைபெற்று வருகிறது. விழாவின் வரவேற்புரையை அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.

lunch-for-students-in-vijay-meeting-today

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு விஜய் விருது வழங்கி வருகிறார். 1700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். உங்கள் குணத்தை நீங்கள் இழந்துவிட்டால் நீங்கள் அனைத்தும் இழந்து விடுவீர்கள் என அறிவுரை வழங்கினார்.

மதிய உணவு

இதனை தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உண்ணும் மதிய உணவு தயாராகி வருகிறது. ஜம்ஜம் சுவீட், மாங்காய் ஊருகாய், இஞ்சி புளி துவையல் புதினா, ஆனியன் வெள்ளேரி தயிர்பச்சடி,

lunch-for-students-in-vijay-meeting-today

கதம்ப பருப்பு பொரியல், உருளை பட்டாணி வருவல், சவ்சவ் கூட்டு, காளிஃபிளவர் பகோடா, வெஜ்புலவு, காரகுழம்பு (கத்திரிக்காய்), மாங்காய், முருங்கை கதம்ப சாம்பார், தக்காளி ரசம், ஆனியன் வடை, அப்பளம், அடபிரதம பாயாசம், மோர் உள்ளிட்ட உணவு வகைகள் கொண்ட மெனு தயாராகி வருகிறது.