அதிவேகமாக பரவி வரும் லம்பி வைரஸ் - கொத்துக் கொத்தாக மடியும் மாடுகள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Gujarat Viral Video Uttar Pradesh Virus Rajasthan
By Nandhini Sep 22, 2022 05:50 AM GMT
Report

அதிவேகமாக பரவி வரும் லம்பி வைரஸால் வடமாநிலங்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்து வருகின்றன. 

அதிவேகமாக பரவி வரும் லம்பி வைரஸ்

வடமாநிலங்களில் லம்பி வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் கொத்துக் கொத்தாக மாடுகள் உயிரிழந்து வருகின்றன.

ராஜஸ்தானில் மட்டும் 60,000க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்துள்ளது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 1200 மாடுகளும், ஜார்கண்டில் 20 மாடுகளும், குஜராத்தில் 5000 மாடுகளும், பஞ்சாபில் 10,000 மாடுகளும், ஹரியானாவில் 1000 மாடுகளும், ஹிமாச்சலில் 5000 மாடுகளும் லம்பி வைரஸால் உயிரிழந்துள்ளன.

தற்போது சமூகவலைத்தளங்களில் இது குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், லம்பி வைரஸால் பாதிக்கப்பட்ட மாடுகளின் துயரத்தை காண முடிகிறது.   

Lumpy Virus