தமிழ்நாட்டில் லுலு நிறுவனம் ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம் - அண்ணாமலை எச்சரிக்கை..!
தமிழ்நாட்டில் லுலு நிறுவனம் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க விட மாட்டோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,திமுக தேர்தல் அறிக்கையில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறியதை அடுத்து லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் நம்பி வாக்களித்தானர்.
பாஜக ஆரம்பத்திலேயே இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்று கூறினோம். நாங்கள் சொன்னதை தான் தற்போது நிதியமைச்சர் சொல்லியுள்ளார் என்றார்.
மேலும் அவர்,வால்மார்ட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள் லுலு நிறுவன விஷயத்தில் அமைதியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் லுலு மால் தொடர்பாக ஒரு செங்கலை கூட வைக்க பாஜக அனுமதிக்காது.
சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்கும் லுலு நிறுவனத்தை வரவிடமாட்டோம் என தெரிவித்தார்.