பிரேசிலில் 3-வது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற லூயிஸ் இனாசியா லூலா டா... - குவியும் வாழ்த்துக்கள்

Brazil
By Nandhini Nov 01, 2022 11:23 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பிரேசில் நாட்டின் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரும், இடதுசாரி தலைவருமான லூயிஸ் இனாசியா லூலா டா 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற லூயிஸ் இனாசியா லூலா டா

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய அதிபர் போல்சனாவை தோற்கடித்து லுலா டா பிரேசில் நாட்டின் அதிபராக வெற்றி வாகை சூடியுள்ளார். நடத்தப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்புகளில் அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை எனக் கூறியபோதும் அவர் அமோக வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

லுலா டா அதிபராக வெற்றி பெற்றதை அந்நாட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவு லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடி லூலா டா வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். 

பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லுலா டாவிற்கு உலகத் தலைவர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.    

luizinac-iolula-da-silva-brazil