நடுவானில் மயங்கிய விமானி - ஆளே இல்லாமல் 199 பயணிகளுடன் பயணித்த விமானம்
மயங்கிய விமானி
ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து ஸ்பெயினின் செவில்லே நகர் நோக்கி லுப்தான்ஸா ஏர்பஸ் A321 என்ற விமானம் பறந்துள்ளது. அதில், 199 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணித்துள்ளனர்.
தரையிறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக விமானி கழிவறைக்கு சென்ற நேரத்தில், சக விமானி எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்துள்ளாஎர்.
10 நிமிடங்களுக்கு விமானம் ஆட்டோ-பைலட் முறையில் செயல்பட்டுள்ளது. 8 நிமிடத்திற்கு பின்னர் கழிவறையில் இருந்து வெளியே வந்த விமானி அவர் மயக்கமடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
விபத்து தவிர்ப்பு
விமானி காக்பிட்டிற்குள் நுழைய அக்சஸ் கேட்டுள்ளார். ஆனால் துணை விமானி மயக்கத்தில் இருந்ததால் 5 முறை அவர் அக்செஸ் கேட்டும், அவரால் ஆக்செஸ் வழங்க முடியவில்லை.
இதனையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட சீக்ரெட் கோட் மூலம் உள்ளே செல்ல முயன்றார். அப்போது மயக்கம் தெளிந்த துணை விமானி கதவை திறந்துள்ளார். இதனால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பின்னர் விமானத்தை இயக்கிய விமானி, மாட்ரிட் விமான நிலையத்தை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.
மாட்ரிட் விமானநிலையம் அனுமதி வழங்கியதும், அங்கு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார். அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர், துணை விமானியை மருத்துவனைக்கு அழைத்து சென்றனர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லுஃப்தான்சா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. துணை விமானி மயங்கிய நேரத்தில், விமானம் ஆட்டோ-பைலட் முறையில் பறந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
