தாய் மற்றும் 4 தங்கைகளை கொன்ற இளைஞர் - வெளியான பகீர் காரணம்
இளைஞர் ஒருவர் தனது தாய் மற்றும் 4 தங்கைகளை கொலை செய்துள்ளார்.
4 சகோதரிகள்
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ (Lucknow) மாவட்டம், நாகா பகுதியில் தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது.
ஆக்ராவை சேர்ந்த அர்சத் என்பவர் புத்தாண்டுக்கு முந்தைய தினம் தனது தாய் மற்றும் 4 சகோதரிகளை இந்த தங்கும் விடுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
கொலை
இதனையடுத்து, இன்று காலை(01.12.2025) இவர்களின் அறையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், விடுதி ஊழியர்கள் கதவை திறக்க முற்பட்டுள்ளனர். அப்போது அந்த நபர் எச்சரித்த நிலையில், ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
காவல்துறை வந்தபோது அந்த அறையில் இருந்த தாய் மற்றும் 9,16,18 மற்றும் 19 வயதுடைய அவரது 4 சகோதரிகள் பிணமாக கிடந்தனர். விசாரணையில், தாய் மற்றும் சகோதரிகளுக்கு மதுவில் விஷம் கொடுத்து அவர்களின் கழுத்தை நெரித்தும், மணிக்கட்டை அறுத்தும் கொலை செய்துள்ளார்.
இறந்த 5 பேரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக அர்சத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது தந்தை தலைமறைவாக உள்ள நிலையில், அவருக்கும் இதில் சம்பந்தம் இருக்கும் என அவரை தேடி வருகின்றனர்.
காரணம்
இது தொடர்பாக அர்ஷத், என் தாய் மற்றும் சகோதரிகளை எனது கையாலே கொலை செய்து விட்டேன். நகராட்சியில் வசிப்பவர்களே இதற்கு காரணம். எங்களுடைய வீட்டைப் பறிப்பதற்காக இவர்கள் எத்தனையோ அட்டூழியங்களைச் செய்தார்கள். எங்களுக்கு உதவ யாரும் முன் வரவில்லை. குளிர்காலத்தில் 10-15 நாட்கள் வீடின்றி அலைந்தோம் என கூறியுள்ளார்.
காவல்துறையினரிடம், எனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் குடும்பத்தின் கதி என்னவாகும் என்று பயந்த அர்ஷாத், தன் தாய் மற்றும் சகோதரிகளை காயப்படுத்தாமல் இருக்க கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.