3 மாதங்களுக்கு துணிகள் இலவசம் - அசத்திய பிரபல ஷாப்பிங் மால்!
3 மாதங்களில் ஏழை மக்கள் தேவையான துணிகளை எடுத்து செல்லலாம் என ஷாப்பிங் மால் ஒன்று அறிவித்துள்ளது.
கடும் குளிர்
உத்தரப் பிரதேசம், லக்னோவில் அனோகா மால் என்ற ஷாப்பிங் மால் செயல்பட்டு வருகிறது. இங்கு, டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாநிலங்களில் ஏழைகள் தங்களுக்கு தேவையான துணிகள் மற்றும் பொருள்களை வந்து இலவசமாக எடுத்து செல்லலாம் என்ற வழக்கத்தை 5 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றனர்.
பொதுவாக வட மாநிலங்களில் குளிர்காலம் மிக தீவிரமாக இருக்கும் என்ற நிலையில், உரிய உடைகள் இல்லாமல் ஏழை மக்கள் சிரமப்படுவதால் இந்த முன்னெடுப்பை நடத்தி வருகின்றனர். மேலும், நன்கொடை வழங்க விரும்புபவர்கள் பொருள்களை வாங்கி மாலில் வைத்து செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
துணிகள் இலவசம்
தொடர்ந்து, அவை பயன்படுத்தக்கூடிய தரத்தில் உள்ளதா என்பதை பரிசோதித்த பின்னரே மால் ஊழியர்கள் அதை வாங்கிக்கொள்கின்றனர். இதுகுறித்து மால் உரிமையாளர் அகமது ராசா கான், பெரும்பாலும் பல மருத்துவர்கள் இங்கு நன்கொடை வழங்குகின்றனர்.
ரிக்ஷா இழுப்பவர்கள், கூலித் தொழிலாளர்கள் போன்ற எளிய மக்கள் இங்கு வந்து பயன்பெறுகிறார்கள். அவர்கள் யாரிடமும் யாசகம் கேட்க வேண்டியதில்லை. தேவையானதை எடுத்துச் செல்லலாம் என்றார். கடந்தாண்டு சுமார் 3,000இல் இருந்து 4,000 பேர் தங்களுக்கு தேவையான துணியை மாலில் இருந்து எடுத்து சென்றார்கள் எனத் தெரிவித்தார்.