2வது டி20 கிரிக்கெட் போட்டி - லக்னோ கிரிக்கெட் மைதான பராமரிப்பாளர் திடீர் பணி நீக்கம்...!

Cricket Indian Cricket Team New Zealand Cricket Team
By Nandhini Jan 31, 2023 12:00 PM GMT
Report

2வது டி20 கிரிக்கெட் போட்டி நடந்து வரும் நிலையில், லக்னோ கிரிக்கெட் மைதான பராமரிப்பாளர் திடீர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா

கடந்த ஞாயிறுக்கிழமை 2-வது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதனையடுத்து களத்தில் இறங்கி ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களத்தில் இறங்கியது.

இப்போட்டியின் இறுதியில், இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து, நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் இரு அணிகளும் உள்ளன.

ஹர்த்திக் பாண்டியா அதிருப்தி

இப்போட்டியை குறித்து ஹார்திக் பாண்டியா பேசுகையில்,

இப்போட்டியில் பிட்ச் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆட்டத்தை சீக்கிரம் முடித்து விடுவோம் என்று நினைத்தேன். ஆனால், ரொம்ப தாமதமானது. உண்மையை சொல்ல போனால் இந்த ஆடுகளம் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது.

இரு அணி வீரர்களுமே பிட்ச் குறித்து அதிருப்தியை தெரிவித்தனர். 20 ஓவர் போட்டிக்கான ஆடுகளம் இது கிடையாது. முன் கூட்டியே ஆடுகளத்தை தயார்படுத்தியிருக்க வேண்டும்.

lucknow-cricket-stadium-s-curator-sacked

லக்னோ மைதான பராமரிப்பாளர் பணி நீக்கம்

100 ரன்கள் என்ற எளிய இலக்காக இருந்தபோதும் இலக்கை அடைய இந்திய அணியும் மிகவும் தடுமாறியது. சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகள் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாத அளவுக்கு சுழன்றுச் சென்றன. இதனால், லக்னோ மைதானம் விவாதப்பொருளாக மாறியது.

இந்நிலையில், லக்னோ மைதானம் குறித்து விமர்சனங்கள் எழுந்ததால், லக்னோ மைதான பராமரிப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது, புதிய பராமரிப்பாளராக சஞ்சீவ் குமார் அகர்வால் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.