லூகாஸ் டிவிஎஸ் நிறுவன முன்னாள் செயல் இயக்குநர் டி.டி.ரங்கசுவாமி உயிரிழப்பு - ஊழியர்கள் இரங்கல்

பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் டி.டி.ரங்கசுவாமி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு வயது 97. வயது மூப்பு காரணமாக உயிரிழந்த ரங்கசுவாமி அவர்களின் இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றது.

சென்னை பாடியில் தொடங்கப்பட்ட லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தில் 1960 ஆம் ஆண்டு நிதித்துறையில் தலைமை பதவி வகித்தார்.

முன்னதாக மும்பையில் இருந்த இவர், சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனர் டி.எஸ். சந்தானம் அழைப்பின்பேரில் சென்னை வந்தார். 1963 ஆம் ஆண்டு பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை பதவிக்கு வந்த அவர், ஓய்வு பெறும் காலம் வரை பொறுப்பு வகித்திருக்கிறார்.

டிவிஎஸ் குழுமத்தின், பிரேக்ஸ் இந்தியா, லூகாஸ் ஆகிய நிறுவனங்களில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியிருக்கிறார். டி.டி.ரங்கசுவாமிக்கு விமலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்