போராடி தோற்ற ஹைதராபாத் அணி - கே.எல்.ராகுலுக்கு அடித்த அதிர்ஷ்டம்
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி போராடி தோற்றதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடந்த லீக் போட்டி ஒன்றில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் 68, தீபக் ஹூடா 51 ரன்களும் எடுக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் ராகுல் திரிபாதி 44,நிக்கோலஸ் பூரன் 34 ரன்களும் எடுக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்று அசத்தியது. முதல் போட்டியில் சொதப்பிய லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுலின் கேப்டன்சி தற்போது வெற்றிகளை குவிக்க தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.