லக்னோவிடம் போராடி தோற்ற பஞ்சாப்... பழைய அணியை பழிதீர்த்த கே.எல்.ராகுல்.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி போராடி தோற்றது.
புனேவில் இன்று நடைப்பெற 42வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் குயின்டன் டிகாக் 46, தீபக் ஹூடா 34 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட பஞ்சாப் அணி ஜானி பேர்ஸ்டோ 32, மயங்க் அகர்வால் 25 ரன்கள் எடுத்தாலும் பிற பேட்ஸ்மேன்கள் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தான் கடந்த சீசன் வரை பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தா என்பது குறிப்பிடத்தக்கது.