விக்கெட் எடுத்து விட்டு வினோதமாக கொண்டாடிய லக்னோ வீரர் - அபராதம் விதித்த பிசிசிஐ

Lucknow Super Giants Punjab Kings IPL 2025
By Karthikraja Apr 02, 2025 07:14 AM GMT
Report

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 13வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது.

பஞ்சாப் அபார வெற்றி

டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 44 ரன்கள் எடுத்தார். 

lsg vs pbks pooran

அதைத்தொடர்ந்து 172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 16.2 ஓவர் முடிவில் 177 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்தனர். 

lsg vs pbks shreyas iyer

தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா, 8 ரன்களில், திக்வேஷ் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கொண்டாட்டத்திற்கு அபராதம்

பிரியன்ஷ் ஆர்யாவை கிண்டல் செய்யும் வகையில் அருகே சென்ற திக்வேஷ் சிங், கையில் ஒரு புத்தகம் இருப்பது போலவும், அதில் இவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என எழுதி வைத்து அதை செய்து முடித்தது போல் சைகை காட்டினார்.  

இருவரும் டெல்லி அணிக்காக விளையாடியவர்கள் என்பதால் நட்பின் அடிப்படையிலே திக்வேஷ் சிங் அவ்வாறு செய்தார். 

நண்பர்களாக இருந்தாலும், எதிரணியினரை மைதானத்தில் கிண்டல் செய்யக்கூடாது என்ற விதியின் அடிப்படையில், போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்ததோடு, ஒரு கண்டிப்பு (Demerit) புள்ளியும் வழங்கப்பட்டு இருக்கிறது.