பண்ட் முழு வீச்சில் ஜொலிக்கத் தொடங்கியுள்ளார்: IPL 2026யில் மிரட்டுவார் - லக்னோ பயிற்சியாளர்

Lucknow Super Giants Rishabh Pant Australia Cricket Team IPL 2026
By Sivaraj Mar 14, 2026 02:12 PM GMT
Report

ரிஷாப் பண்ட் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2026 சீஸனின் முதற்கட்ட அட்டவணை இரண்டு தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை தூண்டியுள்ளது.

இந்த சூழலில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணித்தலைவர் ரிஷாப் பண்ட் முக்கிய பயிற்சி முகாமிற்காக லக்னோ புறப்பட உள்ளார்.

அதற்கு முன்பாக, இந்த வாரம் சென்னையில் நடைபெறும் அணியின் Pre-season பயிற்சி முகாமில் கலந்துகொள்ள வந்துள்ளார்.

இந்த நிலையில், ரிஷாப் பண்ட் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், "பண்ட் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்; நான் முன்பே குறிப்பிட்டது போல, உண்மையான சாம்பியன்கள் எவரும் நீண்ட காலத்திற்குத் துவண்டுபோய் இருப்பதில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், அவர் விளையாடிய கடைசிப் போட்டியில் அவர் எவ்வளவு அபாரமான திறமை கொண்டவர் என்பதை நாம் கண்கூடாகக் கண்டோம். எனவே இந்த ஆண்டும் அவரிடம் இருந்து அதேபோன்றதொரு சிறப்பான ஆட்டத்தையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்துள்ளார்.