இதுக்கெல்லாம எப்படிஆடுறாங்க முதல்ல .. சமந்தாவை கேவலப்படுத்திய பிரபல பாடகி : கோபத்தில் ரசிகர்கள்

Samantha
By Irumporai Mar 27, 2023 05:33 PM GMT
Report

நடிகை சமந்தா மீது பிரபல பாடகி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது , திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் கொஞ்ச நாட்களாகவே மையோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நாட்களை கடந்து வந்தார். அதிலிருந்து மீண்டு இப்பொழுது மறுபடியும் புது தன்னம்பிக்கையுடன் எல்லாவித போராட்டங்களையும் கடந்து நடித்து வருகின்றார்.

எல்.ஆர். ஈஸ்வரி 

இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரி சம்ந்தாவை கடுமையாக விமர்சித்துள்ளார், புஷ்பா படத்தில் இடம்பெறும் ஊ சொல்றியா மாமா ஊ ஊகும் சொல்றியா மாமா பாடலைப் குறித்து பேசிய அவர் பாடலை பாடிய குரல் மற்றும் பாடலின் வரிகளை பற்றியும் அசிங்கப்படுத்தி உள்ளார். இதற்கு அடுத்தபடியாக இதில் நடனமாடிய நடனத்தைப் பற்றியும் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதெல்லாம் ஒரு நடனமா எப்படி இப்படியெல்லாம் ஆடுறாங்க என்றும் கூறியுள்ளார்.

சமந்தா மீது விமர்சனம்

இந்த மாதிரி பாடல்களை சினிமாவிற்கு தயவு செய்து கொடுக்காதீர்கள் என்று கேட்டிருக்கிறார். இதே போல் பாடல் வந்தால் சினிமாவை பார்க்கும் குழந்தைகள் கூட கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனால் இந்த மாதிரியான பாடல் வரிகளையும், நடனத்தையும் தவிர்த்து விட்டால் அது சினிமாவில் நல்ல எதிர்காலத்தை கொடுக்கும். இதை கருத்தில் கொண்டு இனி வரும் படங்களும் இருந்தால் வருங்கால இளைஞர்களின் எதிர்க்காலம் சிறப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.

இதுக்கெல்லாம எப்படிஆடுறாங்க முதல்ல .. சமந்தாவை கேவலப்படுத்திய பிரபல பாடகி : கோபத்தில் ரசிகர்கள் | Lr Eswari Was The One Who Insulted Samantha

சினிமாவி. ஒவ்வெரு பரிமாணத்தின் போது புதுவித நடனங்கள் பிரபலாமாக இருக்கும் அது தற்போது இயல்பாக மாறி போய்விட்டது என்று கூறினாலும் ஒரு பிரபல பாடகி இவ்வாறு கருத்தை தெரிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் சமந்தாவிற்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் தங்களது இணையத்தில் பாடகி எல்.ஆர். ஈஸ்வரிக்கு பதில் கொடுத்து வருகின்றனர்.