அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை - வணிகர்கள் பெரும் மகிழ்ச்சி!
Chennai
LPG cylinder
By Sumathi
வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
சிலிண்டர் விலை
கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்ந்து வந்தது.
குறைவு
இந்நிலையில், 19 கிலோ கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.171 குறைந்து ரூ.2.021.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை கடந்த மாதம் விற்கப்பட்ட 1118.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.