சிலிண்டர் விலை அதிரடி உயர்வு - அதிர்ச்சியில் மக்கள்!

LPG cylinder LPG cylinder price
By Sumathi Mar 01, 2023 04:51 AM GMT
Report

சமையல் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை 

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, இன்று விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

சிலிண்டர் விலை அதிரடி உயர்வு - அதிர்ச்சியில் மக்கள்! | Lpg Cylinders For Commercial Use Price Hike

14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.50 உயர்ந்து 1118.50 க்கு விற்பனையாகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.351 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.1,917 ஆக இருந்த சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.2268 ஆக உயர்ந்து விற்பனையாகிறது.

உயர்வு

சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் ,

டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருவது குறிப்பிடத்தக்கது.