LPG சிலிண்டர் முன்பதிவில் புதிய விதிமுறைகள்

LPG cylinder
By Fathima Apr 29, 2026 09:39 AM GMT
Report

சமையல் எரிவாயு LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் முறையில் புதிய விதிமுறைகள் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலின் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நகர்புறங்களில் 25 நாட்கள் கழித்தும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் கழித்தும் முன்பதிவு செய்ய முடியும்.

LPG சிலிண்டர் முன்பதிவில் புதிய விதிமுறைகள் | Lpg Cylinder Rules From May 1

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 200 ரூபாய் விலை உயர்ந்தது, இந்நிலையில் மே 1ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓடிபியை அடிப்படையாக கொண்டு சிலிண்டர் விநியோகம் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது மாற்றப்படுகிறது.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் நபர்கள் அடையாளத்தை ஒவ்வொரு ஆண்டும் உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

LPG சிலிண்டர் முன்பதிவில் புதிய விதிமுறைகள் | Lpg Cylinder Rules From May 1