புத்தாண்டில் நற்செய்தி: வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு
புத்தாண்டில் ஒரு நற்செய்தியாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம்.
இந்நிலையில், வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு சிலிண்டருக்கு ரூ.102.50 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் (ஜன.1 2022) நடைமுறைக்கு வருகிறது.
இதனால் உணவகங்கள், தேநீர் கடை உரிமையாளர்களுக்கு சற்று அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலைக் குறைப்பால் இன்று முதல் டெல்லியில் வணிக சிலிண்டரின் விலை ரூ.1998.50 என்றும், கொல்கத்தாவில் ரூ.2,074.5 என்றும், மும்பையில் ரூ.1,951 என்றும் சென்னையில் ரூ.2,134.50 என்றளவிலும் இருக்கும்.
இருப்பினும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதாமாதம் உயர்த்தும் முறை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.