கேஸ் சிலிண்டர் விலை சரமாரி உயர்வு - எவ்வளவு பாருங்க!
வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது.
சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும்
கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.5.50 உயர்ந்து ரூ.1965-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உயர்வு
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு வணிக சிலிண்டரின் விலை தற்போது ரூ.1,965-ஆக அதிகரித்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.818.50-ஆக நீடிக்கிறது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் ரூ.1980-க்கும், ஜனவரி மாதத்தில் ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, பிப்ரவரி மாதத்திலும் விலை குறைந்து ரூ.1,959-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.