லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடை
லயோலா கல்லுாரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கல்லுாரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்த வந்த மாணவிகளுக்கு எதிராக சில இந்துத்துவா மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லுாரிக்கு ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மாணவிகளின் பெற்றோர் கல்லுாரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் மாணவிகளை கல்லுாரிக்குள் அனுமதித்தது கல்லுாரி நிர்வாகம். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.