கொரோனா பணியில் உள்ள தன்னார்வலர்களுக்கு லயோலா கல்லூரி உதவி
தன்னார்வலர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு ஆக்சோ மீட்டர் அடங்கிய கிட் வழங்கிய லயோலா கல்லூரி நிர்வாகம்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால் மத்திய மாநில அரசுகள் இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே தொண்டு நிறுவனங்கள் தன்னார்வலர்கள் உட்பட பலர் இந்த தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். லயோலா கல்லூரி சார்பிலும் தன்னார்வலர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
லயோலா கல்லூரி முதல்வர் ஃபாதர் தாமஸ் தெரிவிக்கையில் ”நாங்கள் ஏற்கனவே பல்வேறு குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறோம்.
தற்போது இந்த கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை நகரில் பல்வேறு குடிசைப் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளில் தங்கள் ஈடுபட்டு வருகிறோம்.
பல்வேறு குடிசைப் பகுதிகளில் நாங்கள் ஏற்கனவே தத்து எடுத்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். தற்போது அப்பகுதிகளில் மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஏற்கனவே அப்பகுதியில் உள்ள எங்கள் தன்னார்வலர்கள் இவர்களிடம் ஒரு கிட் கொடுத்து அவர்களுக்கு 50 வீடுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து உள்ளோம்.
ஒவ்வொரு வீடாகச் சென்று தினசரி அவர்களுக்கு காய்ச்சல் சளி, இருமல் போன்ற பல்வேறு உபாதைகள் உள்ளனவா என்று சோதனை செய்து மேலும் அவர்கள் இந்த அறிகுறி தென்பட்டால் சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு மேலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு உடனடியாக அவர்களை கூட்டி சென்று சோதனை உட்படுத்தப்படும். அப்பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாக தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்
மேலும், “இந்த உதவிகள் அனைத்தும் தங்களின் முன்னாள் மாணவர்கள் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மையம் லயோலா கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ டாக்டர் எழிலன் மிகப் பெரிய முயற்சி எடுத்தார்” எனக் கூறினார்