விவாகரத்து குறைவாக உள்ள நாடு இதுதான் - இந்தியாவில் எப்படி?
விவாகரத்து குறைவாக உள்ள நாடுகளில் பட்டியல் வெளியாகியுள்ளது.
விவாகரத்து
உலகிலேயே மிகக் குறைந்த விவாகரத்து விகிதம் இலங்கையில்தான். 1,000 குடிமக்களுக்கு 0.15 என்ற விகிதத்தில் உள்ளது. பாலின சமத்துவமின்மை மற்றும் பெண்கள் தங்கள் கணவர்களை பொருளாதார ரீதியாக சார்ந்திருத்தல் போன்ற சமூகப் பிரச்சினைகள் இங்கு கலாச்சார தடைகளாக உள்ளன.
வியட்நாம் 2வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு 1,000 பேருக்கும் 0.2 விவாகரத்துகள். கத்தோலிக்க தேவாலயங்கள் திருமணத்தை ஒரு தெய்வீக பந்தமாக வலுவாக மதிக்கின்றன. அடுத்தபடியாக குவாத்தமாலாவில் 1,000 குடிமக்களுக்கு 0.2 என்ற குறைந்த விவாகரத்து விகிதம் உள்ளது.
இந்தியாவில் நிலை?
பெருவில் 1,000 பேருக்கு 0.4 என்ற விகிதத்தில் விவாகரத்து விகிதம். கத்தோலிக்க மரபுகள் காரணமாக அயர்லாந்தின் விவாகரத்து விகிதம் 1,000 பேருக்கு 0.6 மட்டுமே உள்ளது. மால்டா நாட்டின் விவாகரத்து விகிதம் 1,000 குடிமக்களுக்கு 0.6 ஆக உள்ளது.
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, 1,000 பேருக்கு 0.8 என்ற விவாகரத்து விகிதமாக உள்ளது. இந்தியாவில் விவாகரத்து விகிதம் 1,000 பேருக்கு 1 என்ற அளவில் 8வது இடத்தில் உள்ளது. சமூக அழுத்தம் மற்றும் மத நம்பிக்கைகள் குறைவான விவாகரத்திற்கு காரணமாக உள்ளது.