குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்-வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்கள்

list votes low mlas
By Arun Raj May 01, 2021 11:11 AM GMT
Report

 2021 சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்கள், அந்தவகையில் 32 எம்.எல்.ஏக்கள் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் யார் யார் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து பார்ப்போம்.

EP14E

ஆவடி தொகுதியில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், 1,395 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவர் இந்த தேர்தலிலும் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். பெரம்பூர் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ பி.வெற்றிவேல் 515 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். அண்ணாநகர் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ எம்.கே.மோகன் 1,687 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவர் இந்த தேர்தலிலும் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். விருகம்பாக்கம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ விருகை ரவி 2,333 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவர் இந்த தேர்தலிலும் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். திருப்போரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.கோதண்டபாணி 950 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். செய்யூர் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு 304 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். மதுராந்தகம் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ எஸ்.புகழேந்தி அதிமுக வேட்பாளரை விட 2,957 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். பர்கூர் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ வி.ராஜேந்திரன் திமுக வேட்பாளரை விட 982 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். திண்டிவனம் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ பி.சீதாபதி அதிமுக வேட்பாளரை விட 101 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இம்முறையும் இவர் திமுக சார்பில் போட்டியிடுகிறார். கெங்கவல்லி தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ மருதமுத்து திமுக வேட்பாளரை விட 2,262 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். பரமத்தி வேலூர் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ கே.மூர்த்தி அதிமுக வேட்பாளரை விட 818 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இம்முறையும் இவர் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ வி.பி.சிவசுப்பிரமணி திமுக வேட்பாளரை விட 2,222 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். கிணத்துக்கடவு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஏ.சண்முகம் திமுக வேட்பாளரை விட 1,332 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். மடத்துக்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் அதிமுக வேட்பாளரை விட 1,667 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவருக்கு திமுக சார்பில் இம்முறையும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நத்தம் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம் அதிமுக வேட்பாளரை விட 2,110 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இம்முறையும் இவர் திமுக சார்பில் போட்டியிடுகிறார். கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காங்கிரஸ் வேட்பாளரை விட 441 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவர் இம்முறையும் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அரியலூர் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ தாமரை எஸ்.ராஜேந்திரன் திமுக வேட்பாளரை விட 2,043 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவர் இம்முறையும் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். திட்டக்குடி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ கணேசன் 2,212 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவருக்கு இம்முறையும் திமுக தலைமை வாய்ப்பு அளித்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ கே.ஏ.பாண்டியன் திமுக வேட்பாளரை விட 1,506 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவருக்கு அதிமுக தலைமை இம்முறையும் வாய்ப்பு அளித்துள்ளது. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ முருகுமாறன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை விட 87 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவருக்கு இம்முறையும் போட்டியிட வாய்ப்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருவிடைமருதூர் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ கோவி.செழியன் 532 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவருக்கு இம்முறையும் போட்டியிட வாய்ப்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பேராவூரணி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மா.கோவிந்தராசு திமுக வேட்பாளரை விட 995 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு அதிமுக வேட்பாளரை விட 2,084 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். திருமயம் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி அதிமுக வேட்பாளரை விட 766 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவருக்கு இம்முறையும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி காங்கிரஸ் வேட்பாளரை விட 2,291 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். விருதுநகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீனிவாசன் அதிமுக வேட்பாளரை விட 2,870 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவருக்கு இம்முறையும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜ் புதியதமிழகம் தலைவர் கே.கிருஷ்ணசாமியை விட 493 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார்.