வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை - 6 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை
வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இந்நிலையில் இன்றும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வங்க கடல் பகுதியில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 மாவட்டங்களில் கனமழை
மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு பின்னர், வெப்பநிலை அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் எனவும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.