மீண்டும் கேரள மாநிலத்திற்கு மஞ்சள் அலெர்ட்! - இந்திய வானிலை ஆய்வு மையம்!
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை
கேரள மாநிலத்தில் இன்று ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செ.மீ. வரையிலான கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
எச்சரிக்கை
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி பரவலாக தென் மாநிலங்களில் மழை பெய்துவரும் சூழலில் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய ஜார்க்கண்ட் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.