அக்டோபர் 23 முதல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் எச்சரிக்கை
சமீபகாலமாக தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியில் வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 15ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு கேரளா புதுவை ஆகிய இடங்களில் துவங்கி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.
இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்பொழுது மிதமான மழை மற்றும் கனமழை வரை பரவலாக பெய்து வருகிறது.

மேலும், ஒரு சில மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதனிடையே தென்மேற்கு அரபிக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலை கொண்டிருக்கிறது.
அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு, வட மேற்கு திசையில் நகரலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த புயல் சின்னம் நாளை அக்டோபர் 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அக்டோபர் 22 சோமாலியா கடற்கரை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய கிழக்கு மத்திய வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வானது தாய்லாந்து வளைகுடா பகுதி மற்றும் மியான்மரில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தினம் நாளைய தினம் காலைக்குள் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இதன் தாக்கத்தால் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய கிழக்கு மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். மேலும், புதிய காற்றழுத்த பகுதியானது தாழ்வு பகுதியானது மேற்கு வட மேற்க்காக நகர்ந்து மேலும் வலுப்பெற கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil