காதலர் தினம் - நடுரோட்டில் மனைவிக்கு லிப் கிஸ் கொடுத்த 'சார்பட்டா பரம்பரை' வேம்புலி - போட்டோ வைரல்
நடிகர் ஜான் கோக்கென் தனது மனைவிக்கு லிப் கிஸ் கொடுத்த போட்டோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஜான் கோக்கென் தனது மனைவியான நடிகை பூஜா ராமச்சந்திரனுக்கு லிப் கிஸ் கொடுத்த போட்டோ இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.
நடிகர் ஜான் கோக்கென், மும்பையைச் சேர்ந்தவர். இவர் ‘பாகுபலி தி பிகினிங்’, ‘கேஜிஎஃப்’, ‘வீரம்’ உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்திருந்தார் ஜான் கோக்கென். 40 வயதான ஜான் கோக்கென் 2012ம் ஆண்டு பிரபல நடிகையான மீரா வாசுதேவனை திருமணம் செய்தார்.
நடிகை மீரா வாசுதேவன் தமிழில் ‘உன்னை சரணடைந்தேன்’, ‘அறிவுமணி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர்களின் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. கடந்த 2016ம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இதனையடுத்து, 2019ம் ஆண்டு நடிகையும், தொகுப்பாளினியுமான பூஜா ராமச்சந்திரனை காதலித்து 2வதாக திருமணம் செய்துக் கொண்டார் ஜான் கோக்கென்.
பூஜா ராமச்சந்திரனுக்கும் இது 2வது திருமணமாகும். எஸ்எஸ் மியூஸிக் சேனலில், தொகுப்பாளராக பூஜா பணியாற்றும்போது, சக தொகுப்பாளரான கிரேக்கை காதலித்து திருமணம் செய்தார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இருவரும் விவாகரது செய்துக்கொண்டனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இருவரும் தங்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.
இன்று காதலர் தினத்தை முன்னிட்டு பூஜா ராமச்சந்திரன் ஷேர் செய்துள்ள புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களை தெறிக்கவிட்டு வருகிறது.
பெங்களூரில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் காதலர் தினத்தை கொண்டாடி வரும் ஜான் கோக்கெனும், பூஜா ராமச்சந்திரனும் ஒருவருக்கொருவர் லிப் கிஸ் கொடுத்து கொண்டனர்.
அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள பூஜா ராமச்சந்திரன், தனது கணவர் மீது காதல் மழை பொழிந்துள்ளார்.
அந்த போட்டோ இதோ -

விடுதலைப் புலிகளுக்கு விற்கப்பட்ட சலேவின் சித்திரவதை காட்சிகள்! கம்மன்பில பெரும் குற்றச்சாட்டு IBC Tamil