ஏனோ வானிலை மாறுதே : இருசக்கர வாகனத்தில் காதல் ஜோடிகள் அட்டகாசம் , வைரலாகும் வீடியோ
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகரில் காதல் ஜோடிகள் பைக்கில் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர், இந்த இடம் காதல் ஜோடிகளுக்கு ஏற்ற இடம் என்று கூறப்படுகிறது.
அதே சமயம் இந்த பகுதிகளில் காதல் ஜோடிகளின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது . இங்கு காதல் ஜோடிகள் செய்யும் அட்டாகசங்களை பார்த்து பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.
இந்த நிலையில், சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டல்பேட்டை சாலையில் பைக்கில் பெட்ரோல் டேங்க் மீது இளம்பெண் அமர்ந்து கொண்டு காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த படி பயணித்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மேலும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் பொருட்படுத்தாமல் காதலர்கள் இந்த ஜாலி ரைடு சென்றுள்ளனர். பின்பக்க சீட்டில் அமர வேண்டிய காதலி, பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது எதிர்ரெதிர் திசையில் அமர்ந்து காதலனை இறுக்கி அனைத்தப்படி பயணித்தார்.
எதிரில், வரும் வாகனங்களை இவர்கள் கவலைப்படவில்லை. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அந்த வழியில் சென்ற பயணிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த தற்போது வைரலாகி வருகிறது.
[
அதில், ஒரு இளைஞன் பைக்கில் செல்வதையும், அந்த இளைஞனின் பைக் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து ரொமான்ஸ் செய்துகொண்டே செல்கின்றனர். மேலும், அவர்கள் செல்லும் சாலை காலியாக இருந்ததால் பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதைப்பார்த்த வாகன ஓட்டி ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது நாடுமுழுவதும் வைரலாகி வருகிறது. அந்த நபரின் வாகன பதிவு எண்ணில் அந்த இருசக்கர வாகனம் சாமராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தது என்று தெரிகிறது.
பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வதோடு, போக்குவரத்து விதிகளை மீறும் காதலர்களுக்கு போலீசார் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan